உலகில் பிரபலமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் விநியோகிக்கப்படும் மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (MICROSOFT WINDOWS) மற்றும் மைக்ரோசாப்ட் ஆபீஸ் (MICROSOFT OFFICE ) போன்றவற்றின் போலி நகல்களை தடை செய்யும் சட்டம் வெகுவிரைவில் இலங்கையில் அறிமுகமாக இருக்கின்றது .இது பொது மக்களுக்கு அசல் நகல்களை ஊக்குவிப்பதோடு இலங்கையில் தற்போது பயன்படுத்தும் போலி வடிவங்களைக் குறைப்பதற்கும் ஆகும்.
இருப்பினும் இந்த செய்தி போலி நகல்களை பயன்படுத்துவோருக்கு ஒரு எச்சரிக்கை ஆகும் . இலங்கையின் தலைநகரான COLOMBO இல் பல கடைகளில் இந்த சோதனை நடவடிக்கை மேட்கொள்ளப்பட்டதை முகப்புத்தகம் வழியாக அறியக்கிடைத்தது . ஆகவே போலி மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (MICROSOFT WINDOWS) மற்றும் மைக்ரோசாப்ட் ஆபீஸ் (MICROSOFT OFFICE ) பயன்படுத்துவோர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் விநியோகிக்கப்படும் ஒரிஜினல் பதிப்பினை வாங்குவதே சிறந்ததாகும் .ஒரிஜினல் பதிப்பின் மூலம் மேலும் பல சலுகைகளை அனுபவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment